பெட்ரோல் பங்க்கில் நூதன மோசடி: ஊழியர்களுக்கு மக்கள் அடி-உதை
சென்னை: சென்னையையடுத்த ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி பெட்ரோல் பங்கில் நூதன மோசடி நடந்து வந்ததை அறிந்த பொது மக்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை விரட்டி விரட்டி அடித்து உதைத்தனர்.
நேற்று இங்கு ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடச் சென்றார். ரூ. 100க்கு பெட்ரோல் ஊற்றச் சொன்னார். ஆனால், ஊழியர் பெட்ரோல் ஊற்றுவது போல 'பாவ்லா' காட்டிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டார்.
ஆனால் சந்தேகமடைந்த ரமேஷ் பெட்ரோல் டேங்கை பார்த்தபோது பெட்ரோல் ஊற்றப்படாததை உணர்ந்து கேள்வி கேட்டார்.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் ொன்று சேர்ந்து கொண்டு ரமேஷை திட்டினர்.
இதைத் தொடர்ந்து ரமேஷ் தனது உறவினர்கள், நண்பர்களை அழைத்துக் கொண்டு பெட்ரோல் பங்குக்கு வந்தார்.
அவர்கள் முன்னிலையில் பெட்ரோல் டேங்கை கழற்றி அதிலிருந்த பெட்ரோலை எடுத்து அளவு பார்த்தபோது அதில் ஒரு லிட்டருக்கும் குறைவான பெட்ரோலே இருந்தது.
இதனால் ரூ. 100க்கான பெட்ரோல் ஊற்றப்படவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து ரமேஷின் உறவினர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை விரட்டி விரட்டி அடித்து உதைத்தனர். பெட்ரோல் பங்க்கையும் இழுத்து மூடினர்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications