ரூ.15 கோடி கள்ளநோட்டு புழக்கம் - ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
மதுரை: இந்தியாவில் உள்ள பணப்புழக்கத்தின் மதிப்பு ஏழு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் 15 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் என்று ரிசர்வ் வங்கி சென்னைப் பிரிவு உதவி மேலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து வங்கி அலுவலர்களுக்கான கள்ள நோட்டுகள் கண்டறிதல், மற்றும் பழுதடைந்த நோட்டுகளை மதிப்பிடுதல் குறித்த பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது.
இந்த முகாமில் ரிசர்வ் வங்கி சென்னைப் பிரிவு உதவி மேலாளர் நந்தகுமார் கலந்து கொண்டு பேசுகையில், 'இந்தியாவில் உள்ள பணப்புழக்கத்தின் மதிப்பு ஏழு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் 15 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள்.
ரிசர்வ் வங்கி 2005 ம் ஆண்டுக்கு பின் வெளியிட்ட ரூபாய் நோட்டுகள், அதிக பாதுகாப்புக்குரியதாக இருப்பதால் கள்ளநோட்டுகள் அடிப்பது கடினம்.
அந்தளவுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்பு, பழுதடைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளில் வரிசை எண் இருந்தால் மட்டுமே, அதற்குரிய பணம் தரப்பட்டது.
தற்போது கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளில் வரிசை எண் தேவையில்லை. நோட்டின் கிழிந்த பகுதி பெரியதாக இருந்தால், அந்த அளவுக்கேற்ப 50 சதவீதம் அல்லது முழு மதிப்பு தரப்படுகிறது.
அதிக எண்ணிக்கையில் கிழிந்திருந்தால் பணம் தரப்படாது. தீயில் சேதமடைந்த நோட்டுகளை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு இன்ஷ்யூர்ட் தபாலில் அனுப்பலாம்' என்றார்
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications