தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே - தமிழர் களம் அரிமாவளவன் குற்றச்சாட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?
முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?
கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது!
ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும்போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?
அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும்போது, தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?
வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு!
அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பேருரு!
தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்!
மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.
மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்டபோதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை! காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்!
ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!
ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!
இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!
இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது! உலகமே இப்படி இருக்கும்போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?
மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால்தான்! தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்துவிட்டார்கள்.
மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும். இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் இரண்டகராகவோ, எதிரியாகவோத்தான் இருப்பர்.
தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications