ஐபிஎல் விவகாரத்தில் சிக்கி சசி தரூர் ராஜினாமா செய்தார்

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் நிலைக் குழு உறுப்பினர்களும் திட்டவட்டமாக கூறி விட்டதால் வேறு வழியின்றி ராஜினாமா முடிவுக்குத் தள்ளப்பட்டார் தரூர்.
நேற்று காலை முதல் இரவு வரை நடந்த அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் தரூர் விவகாரத்தை தீவிரமாகப் பரிசீலித்த்து காங்கிரஸ் கட்சி. முதலில் பிற்பகல் வாக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் தரூர். அப்போது அவர் அரசுக் காரில் பிரதமர் இல்லத்திற்கு வந்தார்.
பின்னர் மாலையில், காங்கிரஸ் நிலைக்குழுக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அகமது படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீண்ட நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் தரூர் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. பின்னர் இரவில் மீண்டும் பிரதமரைச் சந்தித்தார் தரூர். அப்போது அரசுக் காரில் வராமல் தனது தனிப்பட்ட காரில் வந்தார் தரூர். இதன் மூலம் அவர் ராஜினாமா செய்வதற்காகவே வந்திருப்பதாக கருதப்பட்டது.
அதற்கேற்ப தரூர் தனது ராஜினாமா கடித்த்தை பிரதமரிடம் வழங்கினார். காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால், ராஜினாமா செய்வதாக கூறினார் தரூர்.
இதையடுத்து புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு தரூரின் ராஜினாமாக் கடிதம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கூடவே, இதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற பரிந்துரைக் கடிதத்தையும் பிரதமர் இணைத்திருந்தார்.
அதை ஏற்று உடனடியாக தரூரின் ராஜினாமாக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்தது. அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது.
ஐபிஎல் கொச்சி அணியை வாங்குவதற்காக மறைமுகமான வேலைகளில் தரூர் ஈடுபட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு.தரூரின் தோழியான சுனந்தா புஷ்கர் பங்குதாரராக உள்ள ரெண்டஸ்வஸ் குழுமத்திற்கு ஐபிஎல் கொச்சி அணி கிடைப்பதற்காக தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார் தரூர். இதுதொடர்பாக ஐபிஎல் ஆணையர் லலித் மோடியுடனும் அவர் பேசி, ரெண்டஸ்வஸ் பங்குதாரர்கள் குறித்த முழு விவரத்திற்குள் போக வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. எல்லாவற்றுக்கும் மேலாக தரூரை விட அதி மேதாவித்தனமாக பேசி வரும் அவரது உதவியாளரான கேரளாவைச் சேர்ந்த ஜேக்கப் ஜோசப் என்பவர், ஏலத்தின்போது அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்துதான் தரூரை தூக்கும் முடிவுக்கு பிரதமரும், சோனியா காந்தியும் வந்தனர்.
தரூருக்காக நாடாளுமன்றம் முடக்கப்படுவது சற்றும் நியாயமானதல்ல என்று காங்கிரஸ் கட்சியின் நிலைக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தரூருக்காக பிரதமர் விளக்கம் அளிப்பது தேவையில்லாத செயல் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதையடுத்து தரூரை நீக்கும் முடிவுக்கு காங்கிரஸ் வந்தது. இது தரூருக்குத் தெரிவிக்கப்பட அவரே ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டார்.
எதிர்க்கட்சிகள் வரவேற்பு
தரூரின் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், தரூரின் நிலைப்பாடு பொறுத்துக் கொள்ளவே முடியாததாக இருந்தது. அவர் ராஜினாமா செய்வது மட்டுமே ஒரே பொருத்தமான தீர்வாகும். அதை தற்போது அவர் செய்துள்ளார்.
அவரது தோழி தனது பங்குகளை விட்டுக் கொடுப்பதாக கூறுவதால் மட்டும் தரூர் கறைபடியாதவர் என்று ஆகி விட முடியாது. அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன என்றார்.
சிபிஐ செயலாளர் டி.ராஜா கூறுகையில், தரூர் விலகல் தவிர்க்க முடியாதது. இந்த ராஜினாமா முடிவை அவர் முன்பே எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யுமாறு காங்கிரஸும் அவரை முன்பே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
சுனந்தா புஷ்கர் தனது பங்குகளை விட்டு விடுவதாக கூறியிருப்பது தரூர் ஒரு குற்றவாளி என்பதை அவர்கள் தரப்பே ஒத்துக் கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலம் போன்றதுதான் என்றார் ராஜா.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications