ரூ. 8 லட்சம் மோசடி – பஞ்சாயத்துத் தலைவி உள்பட 3 பேர் கைது
அம்பாசமுத்திரம்: ரூ. 8 லட்சம் முறைகேடு புகாரில் சிக்கிய வெள்ளங்குளி பஞ்சாயத்துத் தலைவி மற்றும் துணை தலைவர் உள்பட 4 பேர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி ஓன்றியத்தில் உள்ளது வெள்ளங்குழி பஞ்சாயத்து. இதன் தலைவராக காந்திமதி, துணை தலைவராக வெங்கடாஜலபதி உள்ளனர்.
இந்த பஞ்சாயத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் சங்கரசுப்பிரமணியன், கோமதி, வேல்சாமி, முத்துகுமார் ஆகியோர் கடந்த மாதம் பஞ் அலுவலத்தை ஆய்வு செய்தனர்.
18 மணி நேரம் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் ஊரக வேலை திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக உட்கட்டமைப்பு திட்டம், மற்றும் பஞ்சாயத்து அடிப்படை திட்டங்கள், செக் மோசடி, வரி விதிப்பு மோசடி, செலவினங்களில் முறைகேட்டால் இழப்பு ஆகியவற்றின் மூலம் ரூ.8 லட்சத்து 24 ஆயிரம் ஊழல் நடைபெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையறிந்த பஞ் தலைவி காந்திமதி, துணை தலைவர், ஊழியர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமறைவானார்கள்.
இதற்கிடையே பஞ் தலைவர் காந்திமதி மார்ச் 10ம் தேதி 1 லட்சத்து 6 ஆயிரம், எழுத்தர் கமலக்கண்ணன் மார்ச் 8ம் தேதி 3 லட்சத்து 43 ஆயிரத்து 330ஐ அம்பையில் உள்ள ஒரு வங்கியில் திருப்பி செலுத்தினர். இதன் மூலம் அவர்கள் தில்லுமுல்லி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி வெளியானதை தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர், மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்பி ஆஸ்ரா கர்க்கிடம் மனு கொடுத்தனர். அதன்படி எஸ்பி அவர்கள் 4 பேரையும் கைது செய்யும் படி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வெள்ளாங்குளி கிராமத்துக்கு சென்று மோசடி புகாரில் சிக்கிய பஞ்சாயத்துத் தலைவி, அவரது கணவர் மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
--
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications