அனல் பறக்கும் நாடாளுமன்றம்-மாலத்தீவில் நண்பர்களுடன் அழகிரி டூர்

நாடாளுமன்றத்திற்கு சரியாக வருவதில்லை. முக்கிய விவாதங்களில் கலந்து கொள்வதே இல்லை என்று ஏற்கனவே அழகிரி மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைமையும் கூட அழகிரி மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
இந் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சையாக ஐபிஎல், சசி தரூர் விவகாரம் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் முக்கிய கேபினட் அமைச்சரான மு.க.அழகிரி, நாடாளுமன்றத்திலும், நாட்டிலும் இல்லாமல் மாலத்தீவில் நண்பர்களோடு ஹாயாக ரெட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பது டெல்லி வட்டாரத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.
மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக மத்திய கமிட்டி உறுப்பினர் சுரேஷ் பாபு, சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்தி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், ஒரு டாக்டர் உள்பட 10 பேருடன் அழகிரி மாலத்தீவுக்கு ஏப்ரல் 16ம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அழகிரியுடன் சென்றுள்ள அனைவருமே நண்பர்களாம். குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லையாம்.
தனது மாலத்தீவு பயணம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அழகிரி தெரிவித்து விட்டாராம். அதேசமயம், அழகிரியின் மாலத்தீவு பயணம் குறித்த தகவலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதற்குக் காரணம், இது தனிப்பட்ட கோடை விடுமுறைப் பயணம் என்பதால் என்று கூறுகின்றனர் அழகிரி தரப்பினர்.
அதேசமயம், அழகிரியின் இந்த மாலத்தீவு பயணம் குறித்து வேறு மாதிரியான கருத்துக்களும் திமுக வட்டாரத்திலேயே கூறப்படுகிறது.
மத்திய அரசியலில் நீடிக்க விரும்பவில்லை. தமிழக அரசியலுக்குத் திரும்புவதே தனது நோக்கம் என்பதை முதல்வர் கருணாநிதிக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க விரும்பும் அழகிரி, கருணாநிதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே வேண்டும் என்றே நாடாளுமன்றத்திற்குப் போகாமல் டூர் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications