ஓகேனக்கல் குடிநீர் திட்டம்: தமிழகம் மீது சட்டரீதியான நடவடிக்கை-கர்நாடகம்

தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஜப்பான் வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி காவிரி ஆற்றில் இருந்து இந்த இரு மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.
ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் ஓகேனக்கல் பகுதி தனது எல்லையில் இருப்பதாகக் கூறி இந்த திட்டத்துக்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
மேலும் இந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதி என்றும் இங்கு நிலம் அளவை சர்வே நடத்திய பிறகே தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கர்நாடக கூறி வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிருபர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை,
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, சமீபத்தில் தமிழக அரசு மாற்றியமைத்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பழைய திட்டப்படி தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்தவில்லை.
முதலில் தீட்டப்பட்ட திட்டத்தின்படி காவிரி ஆற்றிலிருந்து 1.7 டிஎம்சி தண்ணீரைப் பெற்று 30 லட்சம் மக்களுக்கு வினியோகிக்கவே தமிழகம் முடிவு செய்திருந்தது. ஆனால் இப்போது கூடுதலாக 15 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து 2.4 டிஎம்சி நீரைப் பெறும் வகையில் தமிழக அரசு திட்டத்தை சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது.
இவ்வாறு திட்டத்தை மாற்றியமைப்பது சரியல்ல. பழைய வரையரைப்படியே திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் சொன்னபடி தமிழகம் நடந்து கொள்ளவில்லை.
மேலும், காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து பெண்ணாறுக்கு மாற்றி திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து இதுவரை இரு மாநில அரசுகளும் பேசவில்லை. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை டெல்லியில் இன்று சந்தித்து முறையிட உள்ளேன்.
அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் பழைய திட்ட வரையரைப்படியே ஓகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தவிட வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்.
அதைத் தொடந்து இந்த திட்டம் குறித்து கர்நாடக சட்ட வல்லுநர்களுடனும் விவாதிக்க உள்ளேன். இந்த விவகாரத்தில் தமிழகம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications