மும்பை விமான நிலையம்: விமானங்கள் மோதல் தவிர்ப்பு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஒரே ரன்வேயில் ஒரு விமானம் தரை இறங்கவும், மற்றொரு விமானம் புறப்படவும் ஒரே நேரத்தில் அனுமதி அளித்ததால் பெரும் விபத்து நடக்க இருந்தது.
டெல்லியிலிருந்து மும்பைக்கு நேற்று மதியம் கோ ஏர் நிறுவன விமானம் வந்தது. பகல் 1.36 மணிக்கு இந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 30 பயணிகளுடன் குஜராத்தின் பாவ் நகருக்கு கிங் பிஷர் விமானம் அதே ரன்வேயில் கிளம்பவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் ஒரே நேரத்தில் ஒரே ரன்வேயில் எதிரெதிரே ஒரு விமானம் தரை இறங்கவும், மற்றொரு விமானம் புறப்படவும் இருந்தன.
ரன்வே நோக்கி வந்து கொண்டிருந்த கிங் பிஷர் விமான விமானிகள், அதே ரன்வேயில் கோ ஏர் விமானம் தரையிறங்குவதைப் பார்த்து அதிர்ந்து விமானத்தை உடனே நிறுத்தினர்.
அதற்குள் அந்த விமானம் புறப்பட வேண்டாம் என கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் தகவல் வந்தது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு விமானம் புறப்படவும், மற்றொரு விமானம் தரை இறங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications