நம்பி வந்த தாய்க்கு இந்த நிலையா?-பிரபாகரன் அண்ணன்
கோபன்ஹேகன்: தாயகத்தை நம்பி சிகிச்சைக்கு வந்த என் தாயை விமானத்தைவிட்டு இறங்கக் கூட திருப்பி அனுப்பி தமிழகம் அவமானப்படுத்திவிட்டதே, என கண்ணீர் மல்க கூறினார் பார்வதி அம்மாளின் மூத்த மகன் வேலுப்பிள்ளை மனோகரன்.
மலேசியாவில் மகள் வினோதினியுடன் தங்கி இருந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள், பக்க வாத நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். ஆனால் இந்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் அவரை தமிழ் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
அதே விமானத்தில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார். 6 மாத விசா கொடுத்த பிறகு இந்திய அதிகாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயாருக்கு ஏற்பட்ட இந்த நிலை கண்டு மிகவும் மனம் உடைந்து போயுள்ளார் டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரன் சகோதரர் மனோகரன். டென்மார்க்கில் நடந்த ஒரு விழாவில் பேசிய அவர் கண்ணீருடன் கூறியதாவது:
தமிழ்நாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு என் தாயாருக்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் 6 மாத கால விசா வழங்கி இருந்தது. விமானத்தில் சென்னைக்கு சென்ற பிறகு தாயாரை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பி விட்டனர். தமிழ்நாடு என் தாயை புறக்கணித்ததை நினைத்தபோது மிகவும் வேதனை அடைந்தேன். நாங்கள் அருகாமையில் இருக்க முடியாத நிலையில் தாயகத்து உறவுகளை நம்பியே தனியாக அனுப்பி வைத்தோம். ஆனால் அவருக்கு நேர்ந்த நிலை என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.
என் தாயார் ஏற்கனவே இந்தியாவில் இருந்தவர். மருத்துவ சிகிச்சை வேண்டியே சென்னை சென்றார். இலங்கை ராணுவ முகாமில் இருந்ததால் அவருக்கு நினைவு மறதி நோய் ஏற்பட்டுள்ளது.
தற்போது எனது தாயாருக்கு ஞாபக சக்தி மிகவும் குறைந்துள்ளது. ஒரு நோயாளி என்ற நிலையிலாவது என் தாயார் மீது இரக்கம் காட்டி இருக்கலாமே.. நல்ல வேளை மலேஷிய அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டது. இன்னுமொரு மாதத்துக்குள் தாயாரின் சிகிச்சைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார் வேதனையுடன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications