நாடாளுமன்றத்தில் ஒரு வருடமாய் அழகிரியைப் பார்க்க முடியவில்லை- பாஜக கிண்டல்

இன்றைய விவாதத்தின்போது அழகிரி சபையில் இல்லாததால்,பெரும் அமளியும் ஏற்பட்டது.
இன்று லோக்சபாவில் உரம் மற்றும் ரசாயணத்துறை தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அழகிரி அங்கு இல்லை. அவர் மாலத்தீவில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ்,
தற்போதைய மக்களவை ஒரு ஆண்டு முடிய உள்ள நிலையில், எம்பிக்களில் பெரும்பாலானோர் அழகிரியை இதுவரை பார்த்ததில்லை.
கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் வெளிநாடு சென்றுள்ளது குறித்து அழகிரி மக்களவைத் தலைவரிடம் அனுமதி வாங்கியுள்ளாரா.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்கூட அவர் கலந்துகொள்வதில்லை என்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
சுஷ்மா சுவராஜின் பேச்சை பாஜக உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதாதள உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.
அப்போது எழுந்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அழகிரி தற்போது வெளிநாட்டில் உள்ளார். பொதுவாக அமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்றாலும், அவர் இல்லாதபோது மக்களவை விதிப்படி கேள்விகளுக்கு ஜூனியர் அமைச்சர் பதிலளிக்கலாம் என முகர்ஜி தெரிவித்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளிக்க மக்களவைத் தலைவர் அனுமதி அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications