ஐபிஎல் கூட்டத்திற்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு போடுகிறார் மோடி
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை கூட்டியிருப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி லலித் மோடி இன்று பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்.
அவர் சார்பில் ராம்ஜேத்மலானியும், ஹரீஷ் சால்வேயும் ஆஜராகவுள்ளனர். இதனால் மோடி – பிசிசிஐ இடையிலான மோதல் மேலும் விரிவடைகிறது.
கடைசி வரை மோதிப் பார்த்து விடுவது என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் மோடி. இதனால் அனைத்து விஷயத்திலும் கடுமையான பைட் கொடுத்து வருகிறார்.
ஏப்ரல் 26ம் தேதி கூட்டப்பட்டுள்ள ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை நான் மட்டுமே கூட்ட முடியும், கிரிக்கெட் வாரியத்திற்கு அந்த அதிகாரம் இல்லை, எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் முன்பு கூறினார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து இக்கூட்டத்திற்குத் தடை விதிக்க்க் கோரி இன்று அவர் பாம்பே உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அவருக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ராம்ஜேட்மலானி மற்றும் ஹரீஷ் சால்வே ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.












Click it and Unblock the Notifications