ஐபிஎல் ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு கோரி அமளி – லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் ஐபிஎல் ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பாஜக, ஐக்கிய ஜனதாதளம், இடதுசாரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா இன்று பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் இன்று ஐபிஎல் விவகாரத்தில் பெரும் சூடு கிளம்பியது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ஐபிஎல் ஊழலில் பல ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நாளுக்கு நாள் இந்த ஊழலின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது.
முதலில் ஒரு அமைச்சருக்குத் தொடர்பு என கூறப்பட்டது. தற்போது மேலும் 2 அமைச்சர்களுக்குத் தொடர்பு என செய்திகள் வந்துள்ளன. உண்மை என்ன என்பது வெளியே தெரியாமல் சிலர் திசை திருப்ப முயலுகின்றனர்.
எனவே உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். அதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்றார்.
திருடர்களின் கூடாரம் – சரத் யாதவ்
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் பேசுகையில், திருடர்களின் கூடாரமாகி விட்டது ஐபிஎல். தோண்டத் தோண்ட ஊழலாக வந்து கொண்டுள்ளது. பல அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. கருப்புப் பணம் புழங்கும் மையமாக மாறியுள்ளது ஐபிஎல்.
இதை விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வர நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றார்.
ஏன் தயங்குகிறது அரசு – சிபிஐ சாடல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், கடந்த 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நடந்த நிதி மோசடி குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அந்தக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அதில் இருந்தார்.
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுதான் நாடாளுமன்றக் கூட்டுக் குழு. இந்தக் குழுவால்தான் தீர விசாரணை நடத்தி உண்மைகளை அப்படியே வெளிக் கொண்டு வர முடியும்.
ஆனால் இத்தகைய விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை என்றார்.
விவாத்ததிற்குப் பதிலளித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என மக்களவையில் நான் உறுதியளித்துள்ளேன். தேவைப்பட்டால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடலாம் என்றார்.
ஆனால் அரசின் பதில் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி பாஜக உள்ளிட்ட க்ட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து கூச்சலிடத் தொடங்கினார். இதனால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
கூட்டுக் குழு விசாரணை?:
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications