சிங்கப்பூர் வங்கியில் ரூ.92 கோடி பதுக்கிய மோசடி நிறுவனம்
திருப்பூரில் பொதுமக்களின் பல கோடியை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பார்த்தி என்ற நிறுவனம் ரூ 92 கோடியை சிங்கப்பூர் வங்கி ஒன்றில் பதுக்கியுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன்ராஜ், இயக்குனர்கள் கதிரவன், கமலவள்ளி ஆகியோரைக் கைது செய்தனர்.
ஆனால் இவர்களுக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி கே.என். பாஷா முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சார்பில் சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.92 கோடி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அந்தப் பணத்தை எப்படி மீட்டு வந்து பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்ற விவரத்தை வரும் திங்கட்கிழமைக்குள் நீதிமன்றத்தில் விவரமாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications