ஐபிஎல் கூட்டத்தைக் கூட்ட சீனிவாசனுக்கு தகுதி கிடையாது – ஏ.சி.முத்தையா
டெல்லி: கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியையும், ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினர் பதவியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளராகவும் இருக்கும் சீனிவாசனே ஒரு சட்டவிரோதமான பொறுப்புகளை வகிப்பவர். அப்படிப்பட்டவர் எப்படி ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்ட முடியும் என்று கேட்டுள்ளார் சீனிவாசனை எதிர்த்து முன்பு வழக்கு தொடர்ந்தவரும், முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.முத்தையா.
சீனிவாசன், கிரிக்கெட் வாரிய பொருளாளராக இருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கினார். இதை எதிர்த்து முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அத்தோடு முத்தையாவுக்கும் கண்டனம் தெரிவித்து அபராதம் விதித்தது.
இந்த நிலையில் தற்போதைய ஐபிஎல் சர்ச்சையில் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் முத்தையா.
இதுகுறித்து அவர் கூறுகையில், மோடிக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன். ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவை சீனிவாசன் கூட்ட முடியாது என்று அவர் கூறியுள்ளது முழுக்க முழுக்க சரியே. அவர் கிரிக்கெட் வாரிய செயலாளராகவும் இருக்கிறார். ஒரு அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். அவர் எப்படி கூட்டத்தைக் கூட்ட முடியும். கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் அவருக்குக் கிடையவே கிடையாது.
அவரது பதவியே சட்டத்திற்கு புறம்பானதாகும். இவருக்கு வசதியாகத்தான் கிரிக்கெட் வாரிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்தனர். திருத்தத்திற்கு முன்பு இருந்த கிரிக்கெட் வாரிய சட்டத்தின்படி, வாரியத்தின் எந்த ஒரு நிர்வாகியும், வாரியத்தின் வர்த்தக ரீதியிலான அமைப்புகளில் பங்கு பெற முடியாது என்று இருந்தது. இதை சுட்டிக்காட்டித்தான் நான் வழக்கு தொடுத்தேன் என்றார் முத்தையா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications