எனது கணவருக்கு சோனியில் பங்கு இருப்பது உண்மைதான், ஆனால் அது மாமனாருடையது – சரத்பவார் மகள்

தரூரைத் தொடர்ந்து ஐபிஎல் மோசடி வலையில் தற்போது மத்திய அமைச்சர்களான சரத் பவாரும், பிரபுல் படேலும் சிக்கியுள்ளனர். இதில் பிரபுல் படேலின் மகள் பூர்ணாவால் பிரபுல் படேலுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல பவாரின் மருமகனால், பவாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பவாரின் மருமகன் சதானந்த பாலச்சந்திர சுலேவுக்கு சர்ச்சைக்குரிய மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் 10 சதவீத பங்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பவாருக்கு சிக்கலாகியுள்ளது.
ஆனால் இதை திட்டவட்டமாக மறுக்கிறார் சதானந்தாவின் மனைவியும், பவாரின் மகளுமான சுப்ரியா.
இதுகுறித்து சுப்ரியா கூறுகையில், எனது இதயத்தைத் திறந்து கூறுகிறேன், ஐபிஎல் தொடர்பான சர்ச்சைகளில் எனக்கோ, எனது கணவருக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் எனது கணவருக்கு 10 சதவீத பங்குகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. எனது மாமனார் பி.ஆர்.சுலே, மகிந்திரா அன் மகிந்திரா நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தவர். சோனி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தவர்.
அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த 10 சதவீத பங்குகள். எனது மாமனாருக்கு தற்போது 84 வயதாகி விட்டது. மிகவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே தனது பங்குகளை தனது மகன் பெயரில் எழுதி வைத்து விட்டார். இது சட்டப்பூர்வமானது.
முன்பு எனது கணவருக்கு, ஐபிஎல் அணிகளில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் அது பொய்யாகி விட்டதால் இப்போது மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளை வைத்து சர்ச்சையை எழுப்புகின்றனர் என்றார் சுப்ரியா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications