லலித் மோடி பதவி விலக வேண்டும்- சரத் பவார் உத்தரவு

முன்னதாக நேற்று கிரிக்கெட் வாரியத்திற்கு மோடி அனுப்பிய தகவலில், ஐந்து வருடங்கள் பணியாற்றி விட்டேன். எனக்கு ஐந்து நாள் அவகாசம் தாருங்கள். உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறேன் என்று கூறியிருந்தார் மோடி.
மேலும் திங்கள்கிழமை கூட்டப்பட்டுள்ள ஆட்சிமன்றக் குழுவை கூட்டும் உத்தரவை கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கருத்து தெரிவித்த்தையும் தற்போது கைவிட்டு விட்டாராம் மோடி.
இந்த நிலையில் மோடியின் கோரிக்கை குறித்து இன்று மும்பையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூடி ஆலோசனை செய்தனர். இதில் மோடிக்கு அவகாசம் தருவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். மோடி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்ற முடிவுக்கு வாரியம் வந்துள்ளது.
இந்த நிலையில் மோடி உடனடியாக பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சரத் பவார் கூறியுள்ளார்.
இதை மோடியிடமும் பவார் கூறி விட்டாராம். மோடி விவகாரத்தில் பவாருக்கும், பிரபுல் படேலுக்கும் பெரும் சிக்கலாகி விட்டது. நாடாளுமன்றத்தில் இவர்களின் தலையைக் குறி வைத்து எதிர்க்கட்சிகள் கச்சை கட்டி கிளம்பியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இறுக்கம் அதிகரித்தால் இருவரது பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படுவது உறுதி. இதனால்தான் பதவி விலகுமாறு மோடியிடம் கண்டிப்பாக கூறியுள்ளாராம் பவார்.
பவாரின் அட்வைஸை மோடி ஏற்பார் என்று தெரிகிறது. மேலும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரும் யோசனையையும் மோடி கைவிட்டு விட்டதாக தெரிகிறது.
தற்போதைய நிலையில் மோடி விலகாவிட்டால், நாளை மறு நாள் கூடும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் அவரை நீக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications