பிரேஸில்; 1 லட்சம் கரோலா கார்களை திரும்பப் பெறும் டொயோட்டா!

அந்த அளவு வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் குவிகின்றன. இதன் எதிரொலியாக பிரேசில் நாட்டில் ஓடும் 1 லட்சம் டொயோட்டா கரோலா கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
பிரேஸிலின் மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் கரோலா கார்கள் விற்பனை முற்றாகத் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேக வேகமாக இந்த திரும்பப் பெறும் அறிவிப்பை டொயோட்டா வெளியிட்டுள்ளது.
கரோலா கார்களின் அக்ஸலரேட்டர் பெடல்கள் பிரச்சினையாக இருப்பதாலும், காரின் அடிப்பாக விரிப்பில் இந்த பெடல்கள் அடிக்கடி மாட்டிக் கொள்வதாலும் மோசமான விபத்துக்கள் நேர்வதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் கரோலா கார்களை விற்கக் கூடாது என்று உத்தரவிட்டது அந்த மாநில நிர்வாகம்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த டொயோட்டா நிர்வாகம், பிரேஸிலிலும் தனது திரும்பப் பெறல் அறிவிப்பை வெளியிட ஆரம்பித்தது.
முதல் கட்டமாக 100000 கரோலா கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது டொயோட்டா. பாதுகாப்பில்லாத கார்களைத் தயாரித்த குற்றத்துக்காக கிட்டத்தட்ட ரூ 75 ஆயிரம் கோடி வரை அபராதம் செலுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளது டொயோட்டா நிர்வாகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications