திருப்பூர் 'சைமா' உண்ணாவிரத போராட்டம் திடீர் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர் : நூல் விலை உயர்வைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, திருப்பூர் சைமா சங்கம் அறிவித்துள்ளது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி திருப்பூர் சைமா மற்றும் இதர பனியன் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசின் சில நவடிக்கைகள் காரணமாக நூல் விலை சிறிது குறைந்துள்ளதாகவும், இதன் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுகின்றது என்று சைமா சங்கம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications