ஐபிஎல்3 குறித்து ட்விட்டர் மூலம் ‘குவிஸ்’ நடத்தும் லலித் மோடி!
டெல்லி: ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ள லலித் மோடி இப்போது குவிஸ் மாஸ்டராக மாறியுள்ளார். 3வது ஐபிஎல் குறித்து ட்விட்டர் மூலம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதிலையும் அளித்து வருகிறார்.
ஐபிஎல் ஊழல்குறித்து நாடுதான் படு சூடாக உள்ளது. ஆனால், மோடி படு கூலாகத்தான் இருக்கிறார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜில் ஜில்லென்று ட்விட்டர் மூலம் 3வது ஐபிஎல் தொடர் குறித்து கேள்வி கேட்டு பதிலையும் கொடுத்து குவிஸ் மாஸ்டர் போல மாறியுள்ளார்.
2010 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியது யார். இடது கை தொடக்க ஆட்டக்காரர்களா அல்லது வலது கை தொடக்க ஆட்டக்காரர்களா என்பது ஒரு கேள்வி. அதற்கு அவரே கொடுத்துள்ள பதிலில், வலது கை தொடக்க ஆட்டக்காரர்கள் 32.80 சதவீதமும், இடதுகை ஆட்டக்காரர்கள், 25.83 சதவீதமும் சிறப்பாக ஆடினர் என்பது.
அதேபோல மோடி கேட்ட இன்னொரு கேள்வி - 2வதாக பேட்டிங் செய்த அணிகளுக்கு எந்த ஓவரில் அதிக ரன்கள் கிடைத்தன. நிச்சயமாக 20வது ஓவர் இல்லை, சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டிருந்தார் மோடி. அதற்கு அவர் கொடுத்த பதில், 4வது ஓவர்.
செய்தியாளர்கள் மீது பாய்ச்சல்
இதற்கிடையே, இன்று டெல்லிக்கு வந்தார் மோடி. அப்போது அவரை ஏராளமான செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் கோபத்தைக் காட்டினார் மோடி.
ஏன் என்னை காரில் விடாமல் தடுக்கிறீர்கள். ஏன் என்னைத் தடுத்துத் தொல்லை செய்கிறீர்கள். ஜென்டில்மேன்களாக நடந்து கொள்ள மாட்டீர்களா என்று கோபமாக் கேட்டார். பின்னர் அவரது பாடிகார்டுகள் மோடியை அவரது காருக்கு அழைத்துச் சென்று ஏற்றி அனுப்பி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications