கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர் போலீஸில் சரண்-மாணவியுடன் கல்யாணமானதாக தகவல்

சென்னை திருவான்மியூர் திருவீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (21). கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி கல்லுக்குழி உலகநாதபுரம் கள்ளத் தெருவில் வசிக்கும் தாத்தா பிச்சை வீட்டுக்கு வந்தார். பின்னர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-வது ஆண்டு படித்து வந்தார்.
சென்னையில் சரண்யா இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம் (26) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக வளர்ந்தது. கார் டிரைவரான ராமஜெயமும், சரண்யாவும் பெற்றோருக்கு தெரியாமல் வெளியிடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சிக்கு வந்த சரண்யா திடீரென மனம் மாறினார். செல்போனில் ராமஜெயம், பேசினால் சுவிட்ச் ஆப் செய்தார். மேலும் திருச்சிக்கு வந்து ராமஜெயம், சரண்யாவை சந்தித்தார். அப்போது திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினார். ஆனால் சரண்யா, எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இது காதலன் ராமஜெயத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் சரண்யாவுக்கு போன் செய்து திருச்சிக்கு வருவதாக ராமஜெயம் கூறினார். சென்னையில் இருந்த போது தன்னுடன் எடுத்த போட்டோக்களை கொண்டு வந்து தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய சரண்யா, திருச்சியில் உள்ள தாத்தா வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார்.
நேற்று காலை, இருவரும் அப்பகுதியில் உள்ள கோவில் அருகே பேசிகொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமஜெயம், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த ஆசிட்டை சரண்யா முகத்தில் ஊற்றினார். இதில் சரண்யாவின் முகத்தின் வலதுபுறம், வலதுகை, கழுத்து உள்ளிட்ட பகுதிகள் வெந்து கருகியது.
உடனே அக்கம் பக்கத்தினர் சரண்யாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராமஜெயம் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் காதலன் ராமஜெயம் கண்டோன்மெண்ட் போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலம்:
சரண்யாவுக்கும், எனக்கும் 2008-ம் ஆண்டிலேயே வீட்டுக்கு தெரியாமல் திருப்பதியில் திருமணம் நடந்தது. 5 நாட்களாக அங்கேயே குடும்பம் நடத்தினோம். இது எங்கள் 2 பேருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
திருச்சிக்கு வந்த பின் சரண்யா என்னை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்து வந்தார். பல வாலிபர்களுடன் செல்போனில் பேசி வருவதை தெரிந்து கொண்டேன். ஆசையாக சந்தித்து பேச வரும் என்னிடம் கோபமாக திட்டி அனுப்பினார்.
இது எனக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனக்கு கிடைக்காத சரண்யா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் முகத்தில் ஆசிட் வீசினேன். முகத்தில் அழகை இழந்து சரண்யா எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள என்றும் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமஜெயம்.












Click it and Unblock the Notifications