ஒருமையில் பேசிய அதிமுக எம்.பி – கண்டித்த கனிமொழி
டெல்லி : ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லியைப் பார்த்து அதிமுக உறுப்பினர் இளவரசன் ஒருமையில் பேசியதால் அவருக்கு கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நேற்று ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. அப்போது அதிமுக உறுப்பினர் இளவரசன், திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லியைப் பார்த்து ஒருமையில் பேசியதாக தெரிகிறது.
இதை கனிமொழி கண்டித்தார். மேலும் திமுக உறுப்பினர்களும் கண்டித்துப் பேசினர். அதிமுக உறுப்பினருக்கு ஆதரவாக டாக்டர் மைத்ரேயன் பேசியதால் குழப்பம் மேலும் கூடியது.
இதையடுத்து குறுக்கிட்ட அவையை நடத்தி வந்த தற்காலிக தலைவர் ரகுமான்கான் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்டமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ ஏதாவது தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுபற்றி விசாரணை நடத்துமாறு அவைத் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்., அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தைப் பற்றி பேசும்போது தேவையில்லாமல் தனி நபர்களை மரியதைக் குறைவாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
இந்த சண்டையால் சிறிது நேரம் ராஜ்யசபாவில் அமளி நிலவியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications