பிடிபட்டபோது கசாப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்பக் கிடைக்காது!
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு காயத்துடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5800 பணம் மீண்டும் அவனிடம் திரும்ப வழங்கப்பட மாட்டாது எ ன்று தெரிகிறது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட கசாப் மட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிபட்டான். மற்ற 9 பேரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்று விட்டனர்.
காயத்துடன் பிடிபட்ட கசாப்பிடமிருந்து ரூ. 5800 பணம் பறிமுதல் செய்ய்ப்பட்டது. இந்தப் பணத்தை சாட்சியமாக கோர்ட்டில் போலீஸார் சமர்ப்பித்துள்ளனர்.
பத்து தீவிரவாதிகளிடமிருந்தும் மொத்தம் ரூ. 50,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பத்து பேருக்கும் தலா ரூ. 5000 வீதம் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் சாப்பாடு மற்றும் தங்குமிட செலவுக்காக கொடுத்துள்ளனர் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications