ஓடி விடுவார் என்ற சந்தேகத்தில் வீட்டில் சிறை வைக்கப்பட்ட பேராசிரியை மீட்பு
குளச்சல்: காதலனுடன் ஓடிவிடுவார் என நினைத்து வீட்டில் சிறை வைக்கப்பட்ட நாகர்கோவி்ல் பேராசிரியை நேற்று மீட்கப்பட்டார்.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சுவாதிகா. இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த குலசேகரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இருவரின் காதல் விவகாரமும் ரகசியமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் திடீரென சுவாதிகாவின் காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மகளின் காதலை ஏற்க மறுத்தனர். நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குதான் கழுத்தை நீட்ட வேண்டும். மீறி ஏதாவது நடந்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என பெற்றோர் மிரட்டினர்.
இதனால் பெற்றோரின் மிரட்டலுக்கு பயந்து சுவாதிக்கு சில காலம் அமைதியானார். ஆனால் அவருக்குள் இருந்த காதல் மறையவில்லை.
இதற்கிடையே சுவாதிகாவுக்கு வேறோரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நாளை 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கு நாள் நெருங்கிய நேரத்தில் மகளின் நடத்தையில் மாற்றம் தெரிந்ததால் சுவாதிகாவை வீட்டை வெளியே அனுப்ப கூடாது என முடிவெடுத்தனர் அவரது பெற்றோர் கடந்த நான்கு நாட்களாக அவரை வீட்டு சிறையில் வைத்தனர்.
சாப்பாடு, தண்ணீர் எல்லாம் அவர் அறைக்கு சென்றது. இந்த நிலையில் நேற்று காலை சுவாதிகாவுக்கு செல்போன் ஒன்று கிடைத்தது. காதலனுக்கு போன் செய்து வரவழைக்க முடிவு செய்தார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காது என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.
இதையடுத்து போலீசார் சுவாதிகாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது சுவாதிகா எழுதியதாக ஒரு கடிதத்தை அவரது பெற்றோர் போலீசாரிடம் அளித்தனர். அதில் எனது பெற்றோர் விருப்பப்பட்ட இடத்தில் திருமணம் செய்து கொள்வேன். தெரியாமல் போலீசுக்கு தொந்தரவு செய்து விட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications