இந்திய எரிவாயு உற்பத்தி 69% உயர்வு!
Subscribe to Oneindia Tamil

மார்ச் மாதத்தில், உள்நாட்டில் நாள் ஒன்றுக்கு 6,99,190 பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாயுள்ளது. இது, சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால் 3.5 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மார்ச் மாதத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 21 லட்சம் டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துள்ளது. இது, சென்ற ஆண்டு மார்ச் மாத உற்பத்தியை விட 1.3 சதவீதம் அதிகமாகும்.
மேலும் மார்ச் மாதத்தில், உள்நாட்டில் 479 கோடி கன அடி இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதை சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால் 69.4 சதவீதம் அதிகமாகும்.
கிருஷ்ணா- கோதாவரி படுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி தொடங்கியுள்ளால் தான் இந்த வாயு உற்பத்தி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications