வேறு மொழியில் பதிலளிக்க அமைச்சர்கள் முன் அனுமதி பெற வேண்டும்: மீரா குமார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அதைத் தவிர வேறு மொழியில் பதிலளிப்பதாக இருந்தால் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் மீரா குமார் கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த மரபு சாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, ஒரு துணை கேள்விக்கு பஞ்சாபி மொழியில் பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், மக்களவையில் அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பதில் அளிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. வேறு மொழியில் பதிலளிப்பதாக இருந்தால் முன்னதாகவே நோட்டீஸ் தந்து அனுமதி பெற வேண்டும். அப்போதுதான் மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்து உறுப்பினர்களுக்கு பதிலை மொழி பெயர்த்துத் தர முடியும் என்றார்..
அழகிரி என்னை சந்திக்க வேண்டும்: மீரா
இந் நிலையில் புதுச்சேரி வந்த மீரா குமார் டெல்லி திரும்புவதற்காக நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக மக்கள் அன்பும் பாசமும் கொண்டவர்கள். அவர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவது குறித்து அமைச்சர் அழகிரி என்னை வந்து சந்தித்தால், அவரது பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications