நித்யானந்தாவி்ன் சிஷ்யை நித்ய கோபிகா எங்கே?
பெங்களூர்: நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் நித்ய கோபிகா என்ற பெண்ணை சிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
பிடுதி ஆசிரமத்தில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த இவர் தான் நித்யானந்தாவின் பல முக்கிய விவகாரங்களைக் கையாண்டு வந்தார்.
அமெரி்க்கா உள்பட வெளிநாடுகளுக்கு நித்யானந்தா செல்லும்போது தவறாமல் உடன் செல்வபர் இந்த கோபிகா.
ஆனால், நித்யானந்தாவின் செக்ஸ் வீடியோ வெளியானதில் இருந்து கோபிகா தலைமறைவாகிவிட்டார். இந்த வீடியோவை எடுத்ததி்ல் லெனின் கருப்பனுக்கு இந்த நித்ய கோபிகாவும் உதவியிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
நித்யானந்தாவின் செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நித்யானந்தா தன்னை விட்டுவிட்டு ரஞ்சிதா உள்ளிட்ட வேறு சில பெண்களுடன் நெருக்கமானதால் கோபிகா எரிச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் லெனின் கருப்பனுக்கு வீடியோ எடுக்க உதவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐயான நித்ய கோபிகா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரிடம் விசாரித்தால் நித்யானந்தா குறித்த பல விவரங்கள் தெரியவரும் என சிஐடி போலீசார் கருதுகின்றனர். இதனால் அவரைத் தேடி வருகின்றனர். ஆனால், அவர் தலைமறைவாகவே உள்ளார்.
ஆசிரம உணவுக்கு தடை:
முன்னதாக ராம்நகர் துணை சிறையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்ட நித்யானந்தா தனக்கு ஆசிரம உணவு வழங்குமாறு நீதிபதியிட் கோரிக்கை வைத்தார்.
ஆனால், அதை நீதிபதி ஏற்கவில்லை. அதே நேரத்தில் அவரது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டாக்டர் கூறும் உணவு வகைகளை தயாரித்து கொடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தாவிடம், அவரிடமிருந்து ராமநகர் போலீசார் பறிமுதல் செய்த ருத்ராட்ச மாலையை மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
சிறையில் தியானம்-பூஜை:
இந் நிலையில் இன்று காலை சிறை அறைக்குள் நீண்டநேரம் நித்யானந்தா தியானத்தில் ஈடுபட்டார். அறைக்குள் பூஜைகள் நடத்தவும் நித்யானந்தாவுக்கு அனுமதி வழங்கப்பட்டு பூஜை பொருட்களும் வழங்கப்பட்டன.
காரம் இல்லாத சாதாரண உணவு வேண்டும் என்று கேட்டதால் அதற்கேற்ற உணவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே நித்யானந்தா தன்னை ஜாமீனில் விடக்கோரி தாக்கல் செய்துள்ள மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
ரஞ்சிதாவுக்கு போலீஸ் சம்மன்:
இந் நிலையில நித்யானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று கூறியுள்ள நடிகை ரஞ்சிதாவுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கர்நாடகா சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications