தீவிரவாத தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா, கனடா எச்சரிக்கை – உஷார் நிலையில் டெல்லி

டெல்லியில் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. குறிப்பாக கன்னாட் பிளேஸ், சாந்தினி செளக் ஆகிய இடங்கள் தீவிரவாதிகளின் குறியில் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து இந்தப் பகுதிகள் தவிர செங்கோட்டை உள்ளிட்ட தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவும் எச்சரிக்கை
இந்த நிலையில் தற்போது கனடாவும் டெல்லியை தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாக எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தனது நாட்டு குடிமக்களுக்கு கனடா அரசு பிறப்பித்துள்ள சுற்றிலா வழிகாட்டு எச்சரிக்கை செய்தியில், இந்தியாவில் வசிக்கும் கனடிய மக்களும், இந்தியாவுக்கு செல்லும் கனடியர்களும் டெல்லிக்குப் பயணப்படும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக பழையடெல்லியில் உள்ள சாந்தினி செளக் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications