ஈழத் தமிழர்களைக் காக்கத் தவறி விட்டது ஐ.நா. - கிருஷ்ணசாமி
கோவை: ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை தட்டிக் கேட்காமலும், தண்டனை கொடுக்காமலும் ஐ.நா. மவுனம் சாதிப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
புதிய தமிழகம் கட்சியின் இணையதள தொலைக்காட்சி, கோவையில் துவங்கப்பட்டது.
அப்போது, இணையதள தொலைக் காட்சியை ,புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசுகையில்,
தமிழ் மக்களுக்காக 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் வகையில் http://webtv.ptparty.org என்ற இணையதள தொலைக் காட்சி சேவையை புதிய தமிழகம் தொடங்கியுள்ளது.
உலகத் தமிழர்களின் நலனுக்காகவும், தமிழனின் உரிமைக்காகவும் பாடுபடுவோம்.
உலகத் தமிழர்களின் நிலை குறித்த நிகழ்ச்சிகள், செய்தி, மருத்துவம், வேலை வாய்ப்பு, கால நிலை, பொழுது போக்கு உள்ளிட்ட தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம் பெறும்.
உலகம் முழுக்க உள்ள எட்டு கோடி தமிழர்களை ஒன்றிணைப்பதே எங்களின் லட்சியம். இதன் மூலம் ஒன்றிணைந்த தமிழ் உலகமாகவும், உலகத்தமிழ் சமுதாயமாகவும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை தட்டிக் கேட்காமலும், தண்டனை கொடுக்காமலும் ஐ.நா. சபை மவுனம் சாதித்து வருகின்றது.
இது போன்ற பிரச்னைகளில் நாங்கள் தலையீட்டு தீர்வு காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
இந்தோனேஷியா, பர்மா, மலேசியா நாடுகளில் ரப்பர் தோட்டங்களில் கூலிகளாகவும், அடிமைகளாகவும் உள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற புதிய தமிழகம் கட்சி போராடும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications