காலாவதி உணவு விற்போர் மீது கடும் நடவடிக்கை – கமிஷனர் ராஜேந்திரன்
சென்னை : காலாவதி உணவு விற்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 2 பேரை பிடித்துள்ளோம். கிட்டங்கி உரிமையாளரைத் தேடி வருகிறோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சென்னையில்காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடோன் உரிமையளாரை தேடி வருகிறோம். மேல் விசாரணை நடக்கிறது.
காலாவதி உணவு பொருட்கள் ராயபுரம் குடோனுக்கு எப்படி வந்தது? இதை யார் சப்ளை செய்தார்கள் என்பது குறித்தெல்லாம் விசாரித்து வருகிறோம். இதில் எந்த நிறுவனத்துக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.
நித்தியானந்தாவிடம் மீண்டும் விசாரணை
நித்தியானந்தா சென்னை தனிப்படை விசாரித்ததா என்ற கேள்விக்கு,
பெங்களூர் சென்று ஒரு முறை விசாரணை நடத்திவிட்டு திரும்பி உள்ளோம். மீண்டும் அவரிடம் விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் பெங்களூர் செல்ல உள்ளனர் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நியூயார்க்கில் கார் குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சென்னை யிலும் சந்தேகப்படும்படி எங்காவது கார்கள் நிற்கிறதா என்று விழிப்புடன் இருக்க அறிவுவுறுத்தி உள்ளோம்.
குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சென்னைக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. இருப்பினும் சென்னையிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications