டெல்லி பெரியார் மையம் அமைய உதவிய வைகோ, வாஜ்பாயை மறக்கவில்லை – திராவிடர் கழகம்
சென்னை: டெல்லியில் பெரியார் மையம் அமைவது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் செய்த உதவிகளை திராவிடர் கழகம் மறக்கவில்லை, நன்றிக்கடன்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
டெல்லியில் நேற்று பெரியார் மையத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால் பெரியார் மையம் அமைய பேருதவியாக இருந்த வாஜ்பாயையும், தன்னையும் திராவிடர்கழகம் மறந்து விட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் குறை கூறியிருந்தார்.
இதற்கு திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரியார் மையம் அழைப்பிதழோடு தனிக் கடிதம் வைத்து நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று வைகோவின் அலுவலகத்தில் டெல்லி பெரியார் மைய திறப்பு விழா அழைப்பிதழ் அளிக்கப்பட்டது.
மேலும் சில தினங்களுக்கு முன்புகூட பெரியார் மையம் தொடர்பான அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பதிவு செய்துள்ளார்.
பெரியார் மையம் அமைய உதவிய வாஜ்பாயையும், வைகோவையும் நாங்கள் மறக்கவில்லை. மாறாக என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications