போலீஸ் ஸ்டேஷனில் கொலை கைதி தப்பியோட்டம்
நாகர்கோவில்: கொலை வழக்கில் தொடர்புடைய கைதி போலீஸ் வசம் சிக்கிய நிலையில் அவர் கைவிலங்குடன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் மீது தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் 2007ல் நடந்த ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாகவிட்ட இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சுந்தரேசன் சொந்த ஊரான ஆண்டிதோப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரகசியமாக அவரை கண்காணித்து வந்தனர்.
நேற்று இரவு ஆண்டிதோப்பு பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர். பின்னர் வெற்றிக்கோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கொற்றிக்கோடு போலீஸ் ஸ்டேஷன் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட கொலை வழக்கும் அங்கு மாற்றப்பட்டது.
போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்திருந்த நிலையில் நேற்று அதிகாலையில் சுந்தரேசன் சிறுநீர் கழிக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரை போலீசார் வெளியே அழைத்து வந்துள்ளனர். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தாக்கி விட்டு சுந்தரேசன் கைவிலங்குடன் தபபியோடினார். போலீசார் துரத்தியும் அவரை பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications