தமிழக சட்ட மேலவைக்கான மசோதா அதிமுக எதிர்ப்புக்கிடையே ராஜ்யசபாவில் தாக்கல்

தமிழகத்தில் இயங்கி வந்த சட்ட மேலவை கடந்த 1986-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோது இரண்டுமுறை மேலவையை அமைக்க முயற்சித்தது. இருப்பினும் அது முடியவில்லை. பின்னர் வந்த அதிமுக அரசு இதுதொடர்பான தீர்மானத்தை ரத்து செய்து விட்டதால், மேலவைக்கு உயிர்கொடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்தநிலையில் தற்போதைய திமுக அரசு மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. இதுதொடர்பாக கடந்த மாதம் 12ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் தரப்பட்டது.
இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்ட மலேவை மசோதா -2010 என்ற பெயரிலான அந்த மசோதாவை தாக்கல் செய்த வீரப்ப மொய்லி, 78 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த மேலவை அமையும்.
கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தில் மேலவை கலைக்கப்பட்டது. இருப்பினும் 2010, ஏப்ரல் 12ம் தேதி மேலவையை மீண்டும் உருவாக்குவது தொடர்பான தீர்மானத்தை தமிழக சட்டசபை நிறைவேற்றியது என்றார்.
மசோதாவை வீரப்ப மொய்லி தாக்கல் செய்து பேசியபோது அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் எழுந்து, இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. இதை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சட்ட மேலவை இல்லாமலேயே தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பல வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளது என்றார் மைத்ரேயன்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications