வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லி சென்று திட்டக்குழுவுடன் பேசிய பிறகு, தமிழ்நாட்டிற்கு 2010-2011-ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடாக ரூ.20,068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டைவிட ரூ.2,600 கோடி அதிகம் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
மேலெழுந்த வாரியாக பார்க்கின்ற பொழுது இது ஏதோ மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தனது நிதியிலிருந்து ஒதுக்கியது போல தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் சேர்ந்து தங்களது நிதியில் மொத்தமாக செலவழிப்பது தான் இந்த திட்ட ஒதுக்கீடாகும். இதில் தமிழ்நாடு அரசின் பங்கு எவ்வளவு, மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்று தனித்தனியே விவரங்களை தந்திருக்கலாம்.
மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற, மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை உயர்த்தி தமிழ்நாடு அரசு கூடுதலாக எவ்வளவு நிதிதிரட்ட திட்டக்குழுவிடம் ஒப்புக்கொண்டிருக்கிறது என்ற விவரங்களையும் தந்தால் மக்கள் மீது எவ்வளவு கூடுதல் சுமை ஏற்றப்போகிறார்கள் என்பதும் தெரிந்திருக்கும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தான் படுமோசம். வெறும் 4 சதவீதத்தைக்கூட எட்டவில்லை. உலக பொருளாதார தேக்கம் என்று தி.மு.க. அரசு சமாதானம் சொல்லுகிறது. இந்த தேக்க சூழ்நிலையில் ஒட்டுமொத்த இந்தியா 8.5 சதவிகிதம் வளர்ச்சி காண்கின்ற பொழுது, தமிழ்நாடு அதில் பாதியைக் கூட எட்டவில்லை என்பது பரிதாபத்திற்குரியது.
மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் இதையே சுட்டிக்காட்டி இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக வளரவேண்டிய தமிழ்நாடு, படுபாதாளத்தில் விழுந்துகிடக்கிறதே என்று இடித்துக் காட்டியுள்ளார். எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமல்ல, மக்கள் முன்னேற்றத்திற்காக அவை முறையாக செலவிடப்படுகிறதா என்பதே கேள்வி. இந்த முனையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதையே திட்டக்குழுவின் கருத்துரையும் தெளிவாக்குகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications