வீரன் அழகுமுத்துகோன் சிலை பாளையில் வைக்க அரசு அனுமதி
நெல்லை: பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துகோனுக்கு 3,600 கிலோ எடை கொண்ட வெண்கல சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
யாதவர்களை மிகவும் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், யாதவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாநில அளவிலான யாதவர் மகாசபை மாநாடு நெல்லையில் நடந்தது. இதில் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட அழகுமுத்துகோன் சிலையை பாளையில் அமைக்க யாதவ மகா சபை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு அரசின் அனுமதி வழங்கபடாத நிலையில் நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் மாநாட்டு பந்தலில் தற்காலிகமாக சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாளையில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் யாதவ மகா சபை சார்பில் நடந்த மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான யாதவ சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பாளையில் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்காததால் தற்காலிகமாக மாநாட்டு பந்திலேயே சிலை திறக்கப்பட்டது. மொத்தம் 3,600 கிலோ எடையில் வெண்கல சிலை சென்னையில் வடிவமைக்கப்பட்டது.
பாளையில் இந்த சிலையை அமைக்க உடனடியாக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications