சரத் பொன்சேகா உண்ணாவிரதம்!

இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், புதன்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காததற்கு ஆட்சேபம் தெரிவித்து, ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் தினங்களில் அவற்றில் பங்கேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் செவ்வாய்க்கிழமை கோரியிருந்தார் பொன்சேகா.
இதற்கிடையில், சரத் பொன்சேகா மீதான முதலாவது மற்றும் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நேற்று நடைபெற்றன.
காலையில், முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்றபோது மேல்முறையீட்டு நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக, வரும் ஜுலை முதலாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பொன்சேகா புதன்கிழமை பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்தார். ஆனால், அவரை பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனவே உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அறிவித்தார் பொன்சேகா.
இரண்டாவது ராணுவ விசாரணையின்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக சரத் பொன்சேகா நேரில் ஆஜராகவில்லை.












Click it and Unblock the Notifications