திருச்சி அருகே சாலை விபத்தில் சிக்கி 6 மனித நேய மக்கள் கட்சி பிரமுகர்கள் பலி
திருச்சி: மனித நேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் ஆறு பேர் திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). இவர் மனித நேய மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த சையது சாதிக் (37), அப்துல் கனி (42), யாசான் (22), மத்தின் (32), சபியுல்லா (32). ஆகியோர் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளாக இருந்தனர்.
ஷேக் அப்துல்லாவின் சொந்தக் காரில் இந்த ஆறு பேரும், திருச்சிக்கு நிலம் வாங்குவது தொடர்பாக வந்தனர். இதுதொடர்பான வேலை முடிந்து, திருச்சியிலிருந்து கிளம்பினர்.
கரூர் மாவட்டம் பாளையம் வழியாக ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். சபியுல்லா காரை ஓட்டினார்.
கார், கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி போலீஸ் சரகம் சரசம்பட்டி அருகே வந்த போது எதிரே பாளையத்தில் இருந்து அரியலூர் செல்வதற்காக ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.
லாரியை திருச்சி மாவட்டம் கள்ளக்குடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (35) ஓட்டி வந்தார். அப்போது திடீர் என்று லாரியின் அச்சு முறிந்து, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் அங்கும், இங்குமாக தறிகெட்டு ஓடியது. இதில் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரை சிறிது தூரம் லாரி இழுத்து சென்றது. பின்னர் ரோட்டின் ஓரம் உள்ள ஒரு கிணற்றின் அருகே கார் மீது லாரி ஒரு பக்கமாக ஏறி நின்றது. கார் கிணற்றின் ஓரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி விட்டது. காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் சிறிது நேர துடிப்புக்குப் பின்னர் காரில் இருந்த ஆறு பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்த உடன் காரில் இருந்த ஒரு செல்போனை எடுத்து தொடர்பு கொண்ட போது தான் பலியானவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மாலையில் அவர் போலீஸில் சரணடைந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications