நெடுஞ்சாலை கட்டணம்.. பேசமா பிளேன்லயே வந்துறலாம்!

சட்டசபையில் இன்று இது தொடர்பாக பன்னீர்செல்வம் (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), தமிழரசு (பாமக), மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பிரச்சனை கிளப்பி பேசினர்.
பன்னீர் செல்வம் பேசுகையில், தென் மாவட்டங்களில் இருந்து கார்களில் சென்னைக்கு வரும் மக்கள் விமான கட்டணத்தை விட சுங்கச் சாவடிகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், சென்னையில் இருந்து கார் மூலம் திருநெல்வேலி செல்பவர்கள் 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது அரசு நிர்ணயிக்கும் சாலை வரியை விட இரண்டு, மூன்று மடங்கு கூடுதலாக உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு,
விராலிமலைப் பகுதியில் ஒரு தனியார் பஸ் கட்டணத்திற்கு 950 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகளும், தனியார் பஸ் உரிமையாளர்களும் புகார் தெரிவித்தனர். இது குறித்து உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோர் மூலமாக சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடம் பேசுமாறு உத்தரவிட்டோம்.
மேலூரிலும் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டு அங்கு எவ்வளவு கிலோ மீட்டர் தூரத்துக்கு பேருந்து ஓடுகிறதோ அந்த அளவிற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணைப்பிறப்பித்து அதன்படி வசூலிக்கப்படுகிறது.
எனவே இந்தத் தகவலை விராலிமலைப் பகுதி சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேசி முடிவெடுங்கள் என்று தெரிவித்தோம்.
ஆனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை கோட்ட திட்ட அலுவலர், ''புதிய ஒப்பந்தத்தின்படி இந்த கட்டண வசூல் நடைபெறுகிறது. நாங்கள் உடனடியாக முடிவெடுக்க முடியாது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவரிடம் பேசுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தை பொறுத்தவரை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத் தலைவருக்கும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர அகில இந்திய மோட்டார் வாகன உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் பேசியிருக்கிறார்கள்.
ரூ.15,000 கட்டணம் செலுத்தி விட்டால் இந்தியா முழுவதும் எங்கும் போகலாம் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்கள். இது குறித்து மத்திய அமைச்சர் விரைவில் முடிவெடுப்பார்.
இது தொடர்பாக மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை ஆணைய தலைவருக்கு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications