'பொர்ரா குகைகள்' ஆந்திராவுக்கே சொந்தம்-உச்ச நீதிமன்றம்!

கிழக்குக் கடலோரத்தில் ஒரிஸ்ஸா எல்லையில் ஆனந்தகிரி மலைத் தொடரில் அரக்கு பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள இந்தக் குகை உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் மூலம் ஆந்திர அரசுக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
1807ம் ஆண்டு வில்லியம் கிங் ஜார்ஜ் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குகை நாட்டின் மிகப் பெரிய குகைகளில் ஒன்றாகும். மிக ஆழமான இந்தக் குகையின் வாயிலில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இதை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.
ஆனால், இந்தக் குகை அமைந்துள்ள பகுதி தனக்கு சொந்தமானது என்று ஒரிஸ்ஸா மாநிலம் பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. அதில் பொர்ரா குகைகள் எங்கள் மாநிலத்தில்தான் அமைந்துள்ளது. அதை ஆந்திரா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அதை மீட்டுத் தர வேண்டும் என்று கோரியிருந்தது.
ஆனால், விசாரணையின் போது ஆந்திர அரசு பொர்ரா குகைகள் ஆந்திராவில் இருப்பதற்கான வரலாற்று, புவியியல் ஆதாரங்களை தாக்கல் செய்தது. ஆனால் ஒரிஸ்ஸா எந்த ஆதாரமும் தரவில்லை.
இதையடுத்து இந்தக் குகைகள் ஆந்திராவுக்குத்தான் சொந்தம், அதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. ஒரிஸ்ஸா அரசு இந்தக் குகைகளுக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் குகையில் சில அரிய வெளவ்வால்கள், செடிகளும் உள்ளன. இதனால் இந்தப் பகுதியில் சுரங்கப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாகணப்பட்டினத்தில் இருந்து ரயில், பஸ்கள் மூலம் இந்தக் குகைகளுக்குச் செல்லலாம். கிழக்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 100 கி.மீ. தூரம் கிட்டத்தட்ட 30 கணவாய்களைக் கடந்து பஸ்களும் ரயில்களும் சென்று வருகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications