பள்ளி கல்வி கட்டணம்: 'சுப்ரீம் கோர்ட்டில் அரசு விளக்கும்'
சென்னை: தனியார் சுய நிதி பள்ளிகளுக்கான கட்டணங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் இன்று சுயநிதி பள்ளிகளுக்கு, அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில்ளித்து தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுய நிதி பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு கல்வி கட்டணம் நிர்ணயிப்பது குறித்து பத்திரிகைகளில் விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் தனிப்பட்ட வகையில் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதை சில பள்ளிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. சில பள்ளிகள் ஏற்கவில்லை. ஆனாலும் இது குறித்து கமிட்டியிடம் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது. சிலர் உச்ச நீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர். இந்த வழக்கு நாளை (11ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
அதில் தமிழக அரசின் நிலை குறித்து கருத்து எடுத்து வைக்கப்படும்.
சமச்சீர் கல்வியை பொறுத்தவரை 1 மற்றும் 6ம் வகுப்புகளில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். அதற்கு எந்த தடையும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications