செக்கிங் இன்ஸ்பெக்டரை கொலை வெறியுடன் தாக்கிய கும்பல்- தலைமைச் செயலாளர் பிஏ மகன் மீது புகார்
சென்னை : அரசுப் பேருந்தில் பயணித்த ஒரு கும்பல் டிக்கெட் எடுக்காததை தட்டிக்கேட்ட செக்கிங் இன்ஸ்பெக்டரை கோட்டைக்கு வரவழைத்து அங்கு கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய கும்பலுக்கு தலைமைச் செயலாளரின் உதவியாளர் மகன்தான் தலைமை தாங்கியதாக பாதிக்கப்பட்ட செக்கிங் இன்ஸ்பெக்டர் புகார் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜோதி (55). நேற்று 2 சக செக்கிங் இன்ஸ்பெக்டர்களோடு திருவான்மியூர் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் நிறுத்தத்தில் பஸ்களில் சோதனை செய்துகொண்டிருந்தார்.
521ம் எண் பஸ்சில் சோதனை போட்டபோது சில வாலிபர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களை, ஜோதி பிடிக்க முயன்றார்.
டிக்கெட் எடுக்காத வாலிபர்கள் ஜோதியை அடித்து உதைத்தனர். உடனே ஜோதி பஸ் டிரைவரிடம் பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு விடுமாறு கூறினார். ஆனால் பஸ் டிரைவரோ, பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். சம்பந்தப்பட்ட வாலிபர்கள் போகும்போது, நாங்கள் தலைமை செயலாளரின் உதவியாளருக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றும், உன்னை என்ன செய்கிறோம் பார் என்றும் எச்சரித்துவிட்டு சென்றனர்.
இந்த நிலையில், ஜோதி பல்லவன் சாலையில் பஸ்சை விட்டு இறங்கிவிட்டார். அங்குள்ள பல்லவன் இல்லத்தில் இருக்கும் மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜோதியை, போக்குவரத்து துறை செயலாளர் அழைக்கிறார். நீங்கள் உடனே கோட்டைக்கு போகவேண்டும் என்று ஒரு தகவல் வந்தது.
ஜோதி கோட்டைக்கு விரைந்தார். கோட்டையில் போக்குவரத்து செயலாளரின் அலுவலகம் உள்ள பகுதியில் ஒரு கும்பல் ஜோதியை சுற்றி வளைத்து தாக்கியது. அவர் கீழே விழுந்தார். அப்போது அவரை காலால் எட்டி உதைத்தும் அந்த கும்பல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஜோதி மயக்கமடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஜோதி கூறுகையில், செக்கிங் இன்ஸ்பெக்டருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் நாங்கள் எப்படி பணியாற்ற முடியும். என்னை தாக்கியவர்களில் ஒரு வாலிபர் தலைமை செயலாளரின் உதவியாளர் மகன் என்று சொல்லி தான் என்னை அடித்து உதைத்தார் என்றார்.
இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் ஜோதி புகார் கொடுத்துள்ளார். போலீஸார் புகாரைப் பரிசீலித்து வருகின்றனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மாட்டுத்தாவணியில் பயணிகள் திடீர் மறியல்! விடிய விடிய காத்திருந்தும் பேருந்துகள் வராததால் போராட்டம்!












Click it and Unblock the Notifications