26 லட்சம் வாக்காளர்கள் புறக்கணித்ததால் நாங்கள் தோற்றோம் – ரனில் விக்கிரமசிங்கே
சென்னை: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 26 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு செய்ததால்தான் எங்களது கூட்டணி தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று கூறியுள்ளார் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரனில் விக்கிரமசிங்கே.
கொழும்பில் இருந்து டெல்லி செல்லும் வழியில் சென்னைக்கு நேற்று மாலை வந்தார் ரனில். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டெல்லிக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளேன். டெல்லியில் எனக்கு நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களை சந்தித்து பேசுவதற்காக வந்தேன்.
இலங்கையில் இருந்து 75 ஆயிரம் தமிழர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு குடி பெயர இருப்பது தொடர்பாக, ஆட்சியில் உள்ளவர்கள் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறு குடியமர்த்தல் குறித்து அரசு தெரிவிக்கவேண்டும்.
பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் சிகிச்சை பெற அனுமதித்து இருப்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. இலங்கையில் பிரபாகரனின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியது தொடர்பாக எனக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இலங்கை பாராளுமன்ற தேர்தலில் 26 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்து விட்டனர். மேலும், தேர்தலில் இயந்திர கோளாறும் ஏற்பட்டது. இதுபோன்ற, பல்வேறு குறைபாடுகள் காரணமாக நாங்கள் தோல்வியை சந்தித்தோம். நீதி, நேர்மை மற்றும் உண்மைக்கு கிடைத்த தோல்வியாகும்.
தற்போது தான், இலங்கையில் புதிய அரசு பொறுப்புக்கு வந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஏராளமான திட்டங்களை எதிர் பார்க்கிறோம். வெளிநாடு, உள்நாடு கொள்கைகள், தொழில், கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் ரனில்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications