நான்கு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு பரிசீலனை
சென்னை: பிளஸ் டூ படிப்புக்குப் பின் படிக்கும் வகையில் நான்கு ஆண்டு பி.எட். படிப்பை கொண்டு வர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
சட்டப்சபையில் நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், கல்வியைப் பெறுவது அடிப்படை உரிமை என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்போது, 8 லட்சம் ஆசிரியர்கள் தேவை என்றும், இதனால் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு எத்தகைய முயற்சி எடுத்து வருகிறது என்று கேட்டா.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் எண்ணிக்கை 756 ஆக உள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்து ஆண்டுதோறும் வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 லட்சம். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அதிகளவு உள்ளனர். நடுநிலைப் பள்ளிகளில் கூட பி.எட். படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கல்வியைப் பெறுவதற்கான உரிமை என்ற சட்டம் அமலாகும்போது, தமிழகத்தில் தேவையான அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றார்.
அப்போது, குறுக்கிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இப்போது பட்டப்படிப்பு முடித்ததும் ஓராண்டு பி.எட். படிப்பு நடைமுறையில் உள்ளது. இதனுடன், பிளஸ் டூ படிப்புக்குப் பிறகு நான்கு ஆண்டு பி.எட். படிப்பை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications