காதல கல்யாணம் செய்த தம்பதிகள் ரேஷன் கார்டு பெற சலுகை-அமைச்சர் வேலு
சென்னை: காதல் கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு, ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருந்தால் அவர்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ரேஷன் கார்டு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு உணவுத்துறை அமைச்சர் வேலு பதில் அளித்து பேசினார்.
அவர் கூறுகையில், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், விவாகரத்து பெற்ற பெண்களுக்கும் ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்று மகளிர் ஆணைய தலைவி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
எனவே கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கள் கணவர் எந்த முகவரியில் இருக்கிறார் என்று தெரிவித்தால் அந்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று விசாரித்து அந்த ரேசன் கார்டில் இருந்து சம்பந்தப்பட்ட பெண்களின் பெயர்களை நீக்கி அவர்களுக்கு ரேசன் கார்டு வழங்கலாம்.
அதேபோல விவாகரத்து பெற்ற பெண்கள், தாங்கள் விவாகரத்து பெற்ற கோர்ட் உத்தரவை காட்டினால் அந்த கோர்ட்டு உத்தரவையே நீக்கல் சான்றிதழாக கருதி ரேசன் கார்டு வழங்கப்படும்.
காதல் மற்றும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தங்கள் பெற்றோர்களிடம் இருந்து பெயர் நீக்கல் சான்றிதழ் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.
எனவே, ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருந்தால் அவர்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பெற்றோர் ரேசன் கார்டு நகல் அல்லது பெற்றோர் முகவரி கொடுத்தால் அந்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று விசாரணை செய்து அந்த கார்டுகளில் இருந்து பெயர்களை நீக்கிவிட்டு 60 நாளில் ரேசன் கார்டு வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications