தலித் நிலத்தை ஆக்கிரமித்தே சிறுதாவூர் பங்களா-நீதிபதி சிவசுப்பிரமணியன்

தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆக்கிரமித்து அங்கு பங்களா கட்டியதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் கூறின. இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தலித்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தின.
ஆனால், தனக்கும், இந்த பங்களாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இந்த நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியன் தலைமையில் குழுவை அமைத்தது தமிழக அரசு.
3 ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்தக் குழு கடந்த பிப்ரவரி மாதம முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் தந்த 40 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி சிவசுப்பிரமணியன் 813 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறுதாவூரில் 1967ம் ஆண்டில் ஏழை தலித் மக்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது.
இதில் 53 ஏக்கர் நிலத்தையும், மேலும் அரசின் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தான் சித்ரா என்பவருக்குச் சொந்தமான பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் பங்களாவை கட்டியுள்ளது.
இந்த பங்களா ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானதல்ல. அதே நேரத்தில் பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.
இந்த நிலங்களை கைப்பற்ற தமிழக அரசின் நில நிர்வாகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த நிலங்களை மீட்டு மீண்டும் ஏழை தலித் மக்ககளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications