பொதுப்பணித் துறையில் தினக்கூலி பணியாளர்கள் 746 பேர் நிரந்தரம்
தூத்துக்குடி: பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்கள் 746 பேரை பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக வேலை பார்த்து வரும் 1056 பேரை கடந்த 2007ம் ஆண்டு நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்தாண்டு சட்டசபையில் பொது பணித்துறையின் மானிய கோரிக்கையின் போது 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் தகுதி வாய்ந்த தினக்கூலி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் தினக்கூலியாக பணியாற்றி வந்தவர் பட்டியல் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் (பொது) அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டது.
இதன் அடிப்படையில் 746 பணியாளர்களை பணி வரன்முறை செய்து அரசு முதன்மை செயலாளர் ராமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இந்த 746 பேருக்கும் உதவியாளர், பாசன உதவியாளர், உள்ளிட்டவைகளில் கல்வி தகுதி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications