பிளஸ் டூ: சென்னை மாணவி-தூத்துக்குடி மாணவன் முதலிடம்

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.
1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.
1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் அறிவியலிலும் தூத்துக்குடி மாணவர் பாண்டியனே 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தாவரவியலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாணவி ஜெனிஷா 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
விலங்கியலில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மாணவர் ஜெயனந்தா எட்வின் 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
புள்ளியியலில் ஈரோடு மாணவர் தீரஜ் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், புவியியலில் மதுரை மாணவி பரமேஸ்வரி 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
மாநில அளவில் சென்னை அனு முதலிடம்:
தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்த பாண்டியன் முதலிடத்தைப் பிடித்திருந்தாலும், மொத்த மதிப்பெண் அடிப்படையில், சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி அனு ஆசைத்தம்பிதான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
1200 மதிப்பெண்களுக்கு அனு 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்:
சமஸ்கிருதம் - 198
ஆங்கிலம் - 193
இயற்பியல் - 198
வேதியல் - 199
உயிரியல் - 200
கணிதம் - 200
மொத்தம் – 1188
பிளஸ்டூவில் தமிழை முதல்மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்குத்தான் அதிகாரப்பூர்வமாக முதலிடம் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தூத்துக்குடி பாண்டியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம், மொத்த மதிப்பெண் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியனை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றுள்ள அனுதான் முதலிடத்தில் வருகிறார்.
வெளி மாவட்ட மாணவர்கள் சாதனை:
சென்னை மாணவர்கள் யாரும் முன்னணி இடங்களைப் பெறவில்லை. அனைத்து இடங்களையுமே வெளி மாவட்ட மாணவர்கள்தான் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மார்ச் மாதம் நடந்த பிளஸ்டூ தேர்வை ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி முடிவை வெளியிட்டார்.
முதலிடம் பிடித்த மாணவன் பாண்டியன் கூறுகையில், அடுத்து பி.இ படிக்க விரும்புகிறேன். அதை முடித்துவிட்டு ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன் என்றார்.
இவருடைய தந்தை ராஜூ நெடுஞ்சாலைதுறை பொறியாளராக உள்ளார். தாய் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications