கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியர் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியைகளை சிலர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ஏற்படுத்தியது. இந்த நிலையில், கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். அந்த பகுதியில் உள்ள பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். செருபுழா பகுதியில் அவர் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
நேற்று காலை அங்குள்ள வீட்டில் கணக்கெடுக்க சென்றார். அப்போது அந்த வீட்டில் 40 வயதான பெண் தனியாக இருந்தார். அங்கு சென்ற மனோஜ்குமார் தனியாக இருந்த அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கத்தி கூச்சல் போட்டதும் அங்கிருந்து மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த மனோஜ்குமார் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மனோஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications