கடைசி நேரத்தில் பிளாட்பாரம் மாற்றம்-டெல்லி ரயில் நிலைய நெரிசலில் 2 பேர் பலி
டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் கடைசி நேரத்தில் ரயில்கள் புறப்படும் பிளாட்பாரத்தை மாற்றியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பலியாயினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பிகார் தலைநகர் பாட்னா செல்லும் சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ், வழக்கமாக 13வது பிளாட்பாரத்தில் இருந்து பிற்பகலில் புறப்பட்டு செல்லும். நேற்று பிற்பகல் 2.50 மணி அளவில் கடைசி நேரத்தில், அந்த ரயில் 12வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் வழக்கமாக 12வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் விக்ரம்சிலா எக்ஸ்பிரஸ் 13வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் 13வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் 12வது பிளாட்பாரத்துக்கும், 12வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் 13வது பிளாட்பாரத்துக்கும் அவசர அவசரமாக பெட்டி, பைகளுடன் ஓடினர்.
இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சோனி (35) என்ற பெண்ணும், 10 வயது சிறுவனும் பலியாயினர். மேலும் 3 பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். தவறு செய்த ரயில்வே அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000மும் நிதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications