நஷ்டத்தை நோக்கி பயணிக்கும் இந்திய ரயில்வே!

முன்னதாக ரயில்வேயின் உபரி வருவாய் ரூ. 2,642 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் இந்த நிதி ரூ. 951 கோடியாகக் குறைக்கப்பட்டது.
முன்னதாக சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ. 58,715 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ. 24,057 கோடியும் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இதில் ரூ. 755 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் பிற வகையான வருவாய் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிதியும் ரூ. 950 கோடி வரை குறைந்துவிட்டது.
இதன்மூலம் வருவாய் ரூ. 88,356 கோடியிலிருந்து ரூ. 86,644 கோடியாகக் குறைந்துவிட்டது.
இதனால் மொத்தத்தில் ரூ. 1,700 கோடி வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீண்ட காலத்துக்குப் பின் முதன்முறையாக ரயில்வேத்துறை நஷ்டத்தை சந்திக்கும் என்று தெரிகிறது.
ஆனால், ரயி்ல்வேயிடம் உள்ள தேய்மான ரிசர்வ் நிதியில் இந்த நஷ்டத்தைக் கழித்துவிட்டு, லாபத்தில் இயங்குவது போல கணக்குக் காட்டிவிட முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ரயில்வேயின் இந்த நஷ்டத்துக்கு எரிபொருள் விலை உயர்வு, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுகள், ரயில்வேயின் பிற முக்கிய செலவுகள் அதிகரித்துவிட்டதும் ஒரு காரணமாகும்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications