எழுத்தாளர் அனுராதா ரமணனின் உடல் தகனம் செய்யப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணனின் உடல் சென்னையில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், மாரடைப்பால் மரணமடைந்தார். 62 வயதான அவருக்கு இருமகள்கள், பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக திருவான்மியூரில் உள்ளது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு திரைப்படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், இயக்குனர் ஆர்.சி.சக்தி, நடிகர் எஸ்.வி.சேகர், எழுத்தாளர்கள் பாலகுமாரன், ஜ.ரா.சுந்தரேசன், சிவசங்கரி, உஷா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், பாக்கெட் நாவல் அசோகன், சுரேஷ்பாலா, ஓவியர்கள் ஜெயராஜ், மாருதி, மணியன் செல்வம், அரசு, நடனம் உள்பட ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெசன்ட் நகர் மயானத்தை இறுதி ஊர்வலம் அடைந்ததும் அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரது உடல் மின் மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+